‘வேட்டையன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது?

‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளநிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தின் இசை மற்றும் பிரிவியூ நிகழ்வு வரும் 20-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News