லியோவை முந்த முடியாமல் திணறும் தி கோட்?

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் லியோ. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ஆனால், இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியிருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்திருந்தது.

ஆனால், சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜயின் தி கோட் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் 188 கோடி ரூபாயை மட்டும் தான் வசூலித்துள்ளதாம்.

இதன்மூலம், தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் செய்த வசூல் சாதனையை, தி கோட் படம் முறியடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News