குட் பேட் அக்லியில் அஜித்தின் சம்பளம் என்ன? விஜயை விட குறைவா?

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி என்ற படம், வரும் தீபாவளி அல்லது டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

இவ்வாறு அடுத்தடுத்த மாதங்களில் அஜித் திரைப்படம் வெளியாக இருப்பது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு, நடிகர் அஜித் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 150 கோடி ரூபாயை, நடிகர் அஜித், சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

அதாவது, தனது படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரத்தின் அளவை தான், தன்னுடைய சம்பளமாக அவர் நிர்ணயித்து இருக்கிறாராம்.

RELATED ARTICLES

Recent News