மது போதையில் சொத்துக்காக தினமும் கதராறு செய்து வந்த மகனை கொலை செய்த தந்தை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது இரங்கநாதபுரம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (66), ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் இவரது மனைவி இறந்த பின்னர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இவருக்கு இரு மகன்கள் உள்ளார். இவரது இளைய மகன் சுகுமார் (33) தனியார் நிதி நிறுவன வங்கியில் பணியாற்றி வருகிறார்.

சுகுமாருக்கு திருமணமாகாத நிலையில் மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தனக்கு திருமணம் முடித்து வைக்க கூறியும் சொத்தில் அதற்குரிய பங்கை பிரித்து தரக்கூடிய தகராறு செய்து வந்துள்ளார்.

குடிபோதையில் தொடர்ந்து தனது தந்தையிடம் தகராறு செய்து வந்த நிலையில் இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (செப்.20) அதிகாலை சுமார் 2 மணியளவில் வழக்கம் போல மது அருந்திவிட்டு தனது தந்தை சுப்பிரமணியிடம் தகாத வார்த்தைகளை பேசி தகராறு செய்துள்ளார்.

தகராறுமுற்றிய நிலையில் தான் வைத்திருந்த கத்தியை வைத்து தனது தந்தையை குத்த முயன்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணி ஆத்திரமடைந்து தனது மகனின் கையில் வைத்திருந்த கத்தியைபிடுங்கி சுகுமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் சுகுமார் கிடந்ததைக் கண்டு தந்தை சுப்பிரமணி உடனடியாக போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று தனது மகனை காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போடி மருத்துவமனை காவலர் போடி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் சுகுமார் அங்கு இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பிரதத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த தந்தை சுப்பிரமணியை கைது செய்யப்பட்டார்.

தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் போடி பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News