கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் குப்பை போடச் சென்ற பத்து வயது சிறுவனை தெரு நாய் கையை கொதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் பால்வாடி இரண்டாவது தெருவை சேர்ந்த கேசவன் (10) அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டில் இருந்த சிறுவன் குப்பையை போட்டுவிட்டு வருவதற்காக தெருவில் இருந்த குப்பை தொட்டிக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்பொழுது சிறுவன் குப்பையை போடும்போது அதை அவரிடம் இருந்து கவ்வி பறிக்க நினைத்த தெரு நாய் ஒன்று, சிறுவனின் கையை கடித்து குதறியது.
இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். சிறுவனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.