ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அல்லது வியாழக் கிழமை அன்று, புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில், தமிழ் மொழியில் உருவான 4 திரைப்படங்கள், நேற்று ரிலீஸ் ஆகியிருந்தது.
அதில், ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்திருந்த லப்பர் பந்து திரைப்படம், சூப்பராக உள்ளது என்று, ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மற்றபடி, சசிகுமார் நடித்திருந்த நந்தன் திரைப்படமும், ஹிப் ஹப் ஆதி நடித்திருந்த கடைசி உலகப் போர் திரைப்படமும், சுமாராக உள்ளது என்று, ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருந்த கோழிப்பண்ணை செல்லதுரை என்ற திரைப்படம், கலவையான விமர்சனங்களையே, ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.