சோஹும் ஷா நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் 12-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் தும்பாட். இந்தி மொழியில் உருவான இந்த திரைப்படம், அந்த சமயத்தில் தோல்வி அடைந்தது.
ஆனால், இப்படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, ரசிகர்கள் பலரால், பெருமளவில் பாராட்டப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த முறை நிச்சயம் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பிய ரசிகர்கள், திரையரங்கிற்கு சென்று, படத்தை பார்த்து, ஆதரவு அளித்துள்ளனர்.
இவ்வாறு இருக்க, இப்படம் ரிலீஸ் ஆன இரண்டு வாரங்களில், நிகர வசூலாக 21.57 கோடியை வசூலித்துள்ளது. முதல் முறையாக இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனபோது வெறும் 13.57 கோடி ரூபாய் தான் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.