திருப்பதி கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு-வில், மாட்டின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக, சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டிருந்தது. இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதே போல், பழனி பஞ்சாமிர்தத்திலும் கலப்படம் இருப்பதாக, இயக்குநர் மோகன் ஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், அவதூறு பரப்பிய குற்றத்திற்காக, திருச்சி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் அவரை இன்று சென்னையில் கைது செய்தனர். தற்போது, திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள அவரிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.