நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படம், கடந்த 5-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. டீ.ஏஜிங் என்ற தொழில்நுட்பம் மூலம், மிகவும் மிரட்டலான முறையில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடியிருந்தது.
இந்நிலையில், 20 நாட்களில், இப்படம் வசூலித்த தொகை எவ்வளவு என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 425 கோடி ரூபாயை தி கோட் திரைப்படம் வசூலித்துள்ளதாம்.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், இசை உரிமம் உள்ளிட்டவற்றின் மூலமாக, ரூபாய் 300 கோடிக்கும் மேல், லாபம் மட்டும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம், தி கோட் திரைப்படம், மாபெரும் வெற்றிப் படம் என்பது உறுதியாகியுள்ளது.