மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (செப்.25) இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
அம்பத்தூர் மற்றும் வானகரத்தில் 13 சென்டிமீட்டர், மலர் காலணியில் 12 சென்டிமீட்டர் என்று அளவில் மிக கன மழை பெய்துள்ளது.
மேலும் மணலி மற்றும் அம்பத்தூரில் 10 சென்டிமீட்டர் மழையும், கேகே நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 சென்டிமீட்டர் மழையும், கொளத்தூர் கோடம்பாக்கம், புழலில் 8 சென்டிமீட்டர் மழையும்,
ராயபுரம், திருவொற்றியூர், பனப்பாக்கம், ஐஸ் ஹவுஸ், மாதவரம், ஆலந்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 7 சென்டிமீட்டர் மழையும்,
மதுரவாயில் மற்றும் சோழிங்கநல்லூரில் 6 சென்டிமீட்டர் என்ற அளவில் கன மழை பெய்துள்ளது.