நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தனது மனைவியை பிரிவதற்கான காரணம் என்ன என்பதை, அவர் கூறியுள்ளார். அதாவது, பிரபல Youtuber ஷா என்பவரை, ஜெயம் ரவி சந்தித்து, தனக்கும், தனது மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அப்போது, “எனக்கு அந்த வீட்டில் மரியாதை கிடையாது. நான் எந்த செலவு செய்தாலும், ஆர்த்தி என்னிடம் கணக்கு கேட்பார். ஆனால், அவர் மட்டும், லட்சக் கணக்கில் செலவு செய்வார்.
நான் என்ன செலவு செய்கிறேன் என்பதை, என்னுடைய உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்வார். என்னை பற்றி என்னிடமே கேட்கலாம். ஆனால், உதவியாளர்களிடம் அதைப்பற்றி கேட்டு, என்னை அவமானப்படுத்துவார்” என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.
இதுதொடர்பான தகவலை, ஆர்.ஜே. ஷா தனது Youtube சேனலில் குறிப்பிட்டுள்ளார்.