முதல் படத்திலேயே முன்னணி நடிகைகளுக்கு இணையாக சம்பளம்.. ஸ்ரீதேவி மகள் அதிரடி!

தடக் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம், ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் அறிமுகமாகியிருந்தார். அந்த படத்திற்கு பிறகு, பல்வேறு இந்தி படங்களில் நடித்த இவர், முதன்முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

தேவரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக, ஜான்வி கபூருக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, 5 கோடி ரூபாயை அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் முதல் படத்திலேயே, பெரிய ஹீரோவுடன் வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி, அதிக தொகையும் சம்பளமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News