கோவையில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து அதிகரித்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கின்ற பகுதிகளில் போதை பொருள் பயன்படுத்திவிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கின்றார்களாவேறு ஏதேனும் சட்ட விரோத பயன்பாட்டு பொருட்கள் இருக்கின்றனவா என சோதனை நடைபெற்று வருகிறது.
காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன், உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி, கோவைபுதூர் சரவணம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.