ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் கூட்டணி சேரும் சிம்பு?

ஆரம்பத்தில் முன்னணி நடிகராக இருந்த சிம்பு, சில தனிப்பட்ட காரணங்களால், சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர், உடல் எடை அதிகமாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அவர், திடீரென உடல் எடையை குறைத்து, மீண்டும் பழைய நிலைக்கு வந்தார்.

அதன்பிறகு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். இவ்வாறு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு, தற்போது, ப்ளாக் பஸ்டர் இயக்குநருடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஓ மை கடவுளே என்ற ப்ளாக் பஸ்டர் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து,தற்போது டிராகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, சிம்புவுடன், அவர் கூட்டணி சேர உள்ளாராம்.

இளைஞர்களை கவரும் வகையில் திரைப்படங்களை எடுக்கக் கூடிய அஸ்வத் மாரிமுத்து, சிம்புவுடன் கூட்டணி சேர இருப்பது, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News