தரமான சாதனை படைத்த மகாராஜா!

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய்சேதுபதியின் 50-வது படமாக உருவாகி இருந்த திரைப்படம் மகாராஜா.

நான் லீனியர் கதை சொல்லல் யுக்தியின் மூலமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து, ரூபாய் 17 கோடிக்கு, பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு, இப்படம் விற்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம் தற்போது ஓடிடியிலும், மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இப்படத்தை 2 கோடிக்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதன்மூலம், 150 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News