பிரியாணியில் இறந்து கிடந்த பல்லி; ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு வாந்தி மயக்கம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஸ்மி என்கின்ற உணவகத்தில் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

பின்னர் பிரியாணியை அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜ்குமாரின் மனைவி சுவாதி மற்றும் இரண்டு மகன்கள் வாந்தி எடுத்துள்ளனர்.

பிரியாணியை சோதனை செய்து பார்த்தபோது பிரியாணியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ராஜ்குமார் அவரது மனைவி சுவாதி இரண்டு மகன்கள் ராஜ்குமாரின் தாயார் ஜெயந்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News