பழனி முருகன் கோயில் ராஜகோபுரம் சேதம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமடைந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு கும்பாபிஷேக பணிகளுக்கு துவங்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் மூன்று ஆண்டுகளாக கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் பணிகள் நிறைவுற்று கடந்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்நிலையில் மலைக்கோவிலின் ராஜ கோபுரம் உச்சியில் ஒரு மூளையில் உள்ள இரண்டு புறமும் கொம்பு போன்ற பகுதியில் ஒரு பகுதி உடைந்துள்ள சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன காரணம் என வல்லுனர்கள் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் பழனி கோயில் தேவஸ்தானம் ஸ்தபதி குழுவிடம் இதனை சரி செய்ய கோரிக்கையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News