தப்பி ஓடிய மணமகன் – மாமனாரை திருமணம் செய்த பெண்!

பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால். 65 வயதாகும் இவர், தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வந்தார். அதன் பயனாக, இவரது மகனுக்கும், ஸ்வப்னா என்ற பெண்ணிற்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ரோஷன் லாலின் மகன், வேறொரு பெண்ணை காதலித்து வந்ததால், திருமண நடக்க இருந்த நாள் அன்று, ஓடி போய்விட்டார். இந்த தகவல், பெண் வீட்டாருக்கு தெரியவரவே, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த விஷயம் ஊருக்கு தெரியவந்தால், குடும்ப மானம் போய்விடுமே என்று பயந்த பெண் வீட்டார், அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்தனர். அதாவது, மாப்பிள்ளையின் தந்தை ரோஷன் லாலுக்கு, தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனையே திருமணம் செய்து கொண்டுள்ளாார். மனமகன் காதலியுடன் ஓடியதால், மாமனாருக்கு மணப்பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News