வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு!

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, விஜயின் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு மொழிகளில் நடித்த இவர், தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து, அதில் தோல்வி அடைந்த வனிதா விஜயகுமார், தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தேதியை Save செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும், வனிதா விஜயகுமார் – ராபர்ட் என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும், ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக் கொண்டு, வனிதா ரொமாண்டிக்காக நிற்கும் புகைப்படமும், வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ராபர்ட் மாஸ்டருடன் வனிதாவுக்கு 4-வது திருமணம் நடக்க உள்ளதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருசிலர், இது புரமோஷனுக்காக செய்யப்பட்ட ஒன்றாக கூட இருக்கலாம் என்று கூறிவருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News