கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கன மழை பெய்தது.
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல சுற்றுவட்டார பகுதிகளான பேரிகை, பாகலூர், மத்திகிரி, உத்தனப்பள்ளி, கோபசந்திரம், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.