தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5.30 மணி வரை) லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.