நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 60 பேர் உயிரிழப்பு: 80 பேர் காணவில்லை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் (அக்.2) நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில் நைஜர் மாநிலத்தின் மோக்வா பகுதியில் இவர்களின் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 60 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சுமார் 160 பேர் கரைக்கு நீந்திச் சென்றும் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டும் உயிர் தப்பினர். இந்நிலையில் எஞ்சிய 80 பயணிகளை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழப்பு 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News