SMS பட ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! சூப்பர் அப்டேட்!

ஜீவா, சந்தானம், அனுயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை, ராஜேஷ் தான் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, ராஜேஷ் முடிவு செய்துள்ளாராம். அதாவது, சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு இயக்குநர் ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம், நிச்சயம் உருவாகும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த படம் தொடர்பாக, நடிகர் ஜீவாவிடம் பேசி உள்ளேன் என்றும், படத்திற்கான கதை எழுதும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News