கவின், அபர்னா தாஸ் ஆகியோர் நடிப்பில், கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான திரைப்படம் டாடா. குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்திருந்தது.
மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இயக்குநர், தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை இயக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் வித்தியாசமான போஸ்டரையும் கணேஷ் பாபு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு, இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.