சென்னையில் இன்று இந்திய விமானப் படையின் வான் சாகசம்!

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

1932-ம் ஆண்டும் அக்.8 தேதி இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.6) மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

நிகழ்ச்சியையொட்டி, 6,500 போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பார்வையாளர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

RELATED ARTICLES

Recent News