விஜய் போட்ட கண்டிஷன்! ஓகே சொன்ன படக்குழு!

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. கே.வி.என். புரொடக்ஷன் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார்.

நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் படக்குழுவுக்கு போட்ட கண்டிஷன் குறித்து தற்போது தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது, மாதத்தில் உள்ள 20 நாட்களுக்கு மட்டும் தான் கால்ஷீட் தருவேன். மீதமுள்ள 10 நாட்களுக்கு, அரசியல் பணிகளை கவனிப்பேன் என்று விஜய் கூறியுள்ளாராம்.

இந்த கண்டிஷனை ஏற்றுக் கொண்ட படக்குழுவினர், அதற்கு ஏற்ற வகையில், தங்களது திட்டங்களை தீட்டியுள்ளார்களாம். சினிமாவை பொறுத்தவரை, மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தான், படப்பிடிப்பு நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News