எதிர்பாராத கூட்டணி! ரஜினியுடன் இணையும் பிரபல இயக்குநர்!

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு, அவர் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு, இயக்குநர் மணிரத்னத்துடன் அவர் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு, ரஜினியின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News