தவெக மாநாடு முன்னிட்டு 1 ரூபாய்க்கு டீ விற்பனை!

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில மாநாடு வரும் 27-ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடக்கிறது.

இதனையொட்டி விருதுநகர் மேற்கு மாவட்டம் இணைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் அருகில் உள்ள டீக்கடையில் டீ விரும்பிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒரு நாள் சலுகையாக 1 ரூபாய்க்கு டீ விற்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மற்றும் டீ விரும்பிகள் அதிக அளவில் டீ சாப்பிடுவதற்கு கடையில் குவிந்து 1 ரூபாய்க்குத் டீ வாங்கி அருந்திச் சென்றனர்.

ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தேனீர் அருந்தி சென்றனர்.

RELATED ARTICLES

Recent News