ரஷ்யாவில் கொண்டாடப்பட்ட மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம்!

சிதம்பரம் இயக்கத்தில், சௌபின் சாகிர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் மஞ்சும்மள் பாய்ஸ்.

குணா குகையில் மாட்டிக் கொண்ட இளைஞரை, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றுவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வெறும் 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டிருந்த இப்படம், 200 கோடி ரூபாய்க்கு மேல், லாபத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற கினோபிராவோ என்ற சர்வதேச திரைப்பட விழாவில், இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.

அப்போது, இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மிகப்பெரிய அளவில் கொண்டாடியுள்ளனர்.

மேலும், கண்கள் கலங்கியபடி, தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான தகவலை, இயக்குநர் சிதம்பரம், தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News