கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு!

சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.

உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஜிப்லைன், பனிமூட்டப்பாதை, கண்ணாடி மாளிகை, பறவையகம், மர வீடு, இசை நீரூற்று உள்ளிட்டவை இதில் இடம்பிடித்துள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த பூங்கா அமைந்துள்ள இடம், ஒரு சங்கத்திடம் இருந்து அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அந்த நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்கா அமைக்க முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில், ரூ.45.99 கோடியில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார்.

RELATED ARTICLES

Recent News