சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று (அக்.06) இந்திய விமானப் படையில் 92-ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்வையிட வந்த ஐந்து பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர்.
நெரிசலில் சிக்கி 240-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களில் 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.