அரியானா, ஜம்மு-காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

அரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அரியானாவில் கடந்த 5-ந்தேதி 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று (அக்.8) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

மேலும், ஜம்மு- காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் கடந்த செப்.18, 25, அக்.1 ஆகிய தேதிகளில் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக பேரவை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளையும் இன்று (அக்.8) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு -காஷ்மீர், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தல் இது என்பதால் முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News