லஞ்ச ஒழிப்பு துறைக்கு லஞ்சம் வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!

லஞ்ச ஒழிப்பு துறைக்கு லஞ்சம் வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரை கைது செய்தனர்.

சேலம் கந்தம்பட்டி பகுதியில் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதாசிவம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரவி குமாரை தொடர்பு கொண்டு போக்குவரத்து அலுவலகத்திற்கு சோதனை செய்ய வருவதற்கு முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், சோதனை நடத்தாமல் இருப்பதற்காக மாதம் மாதம் 50 ஆயிரம் லஞ்சப்பணம் தருவதாகவும் முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விஜிலன்ஸ் டிஎஸ்பி அவர்களிடம் புகார் அளித்தார்.

இதனைதொடர்ந்து இரவு 1 மணி அளவில் பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறி சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதிக்கு சதாசிவத்தை வரவழைத்தார்.

பின்னர் அவர் லஞ்ச பணம் ரூபாய் ஒரு லட்சம் ஓட்டலுக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சுற்றி வளைத்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவத்தை கைது செய்து ஒரு லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் பிறகு சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சதாசிவத்தை அழைத்து வந்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு லஞ்சம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News