திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர், சத்யா காலனி, பொன்னம்மாள் நகர் பகுதியில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இந்த வீட்டில் நாட்டு வெடிகள் திடீரென அதிக சட்டத்துடன் வெடித்து சிதறி உள்ளது. இதில் ஒருவர் உடல் சிதறி 100 மீட்டர் தொலைவில் உடல் பாகங்கள் வீசப்பட்டது. மேலும் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்தது திருமுருகன் பூண்டி போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது இங்கு எப்படி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.