வேட்டையன் படக்குழு எடுத்த முக்கிய முடிவு.. குவியும் பாராட்டு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை, சாதாரண ரசிகர்கள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி, செவித் திறன் குறைபாடு உடையவர்களும், பார்க்கும் வகையில், புதிய அம்சத்தை படக்குழு சேர்த்துள்ளது.

அதாவது, Audio Description and Closed Caption ஆகிய இரண்டு அம்சங்கள், தமிழ் சினிமாவில் முதன்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும், செவித் திறன் குறைபாடு உடையவர்களும், இந்த படத்தை பார்த்து ரசிக்க முடியும். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News