வேட்டையன் பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் நாளை தமிழக முழுவதும் வௌியாகிறது. ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் நாளை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரீபுக்கிங் சில நாட்களுக்கு முன் தொடங்கி வசூலை குவித்தது.

இதற்கிடையே தமிழகத்தில் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசின் அனுமதிக்காக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News