தமிழ் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தொல்.திருமாவளவன்!

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிப்பில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் லப்பர் பந்து. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இந்தியாவை பொறுத்தவரை, கிரிக்கெட் விளையாட்டில் சாதி அரசியலும், அடையாள அரசியலும் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், கிராமப்புறங்களில், கிரிக்கெட் விளையாட்டில், சாதி முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை, லப்பர் பந்து படம் காட்டியுள்ளது என்றும் கூறி, அந்த படத்தை அவர் பாராட்டினார்.

RELATED ARTICLES

Recent News