அஜித்தின் புதிய லுக்.. ரசிகர்கள் உற்சாகம்..

மார்க் ஆண்டனி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது நடிகர் அஜித்தை வைத்து, குட் பேட் அக்லி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் தொடர்பான அப்டேட்டை அவ்வப்போது படக்குழுவினர் வெளியிட்டு வருவதால், ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்தின் இன்னொரு புகைப்படத்தை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஸ்டைலாக கோட் சூட் அணிந்துக் கொண்டு, வில்லத்தனமான சிரிப்புடன், அஜித் கெத்தாக நிற்கும் இந்த புகைப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News