கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து புறப்பட்ட பாக்மதி அதிவிரைவு ரயிலானது கவரப்பேட்டையை வந்தடைந்த போது மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைன் என்று சொல்லக்கூடிய சரக்கு ரயில் நிறுத்தி வைத்திருந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டதில் ரயில் விபத்து ஏற்பட்டது.

இதில் 6 ரயில் பெட்டிகள் முழுமையாக கழன்றுள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்றொருபுறம் விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் இன்று காலையில் ஆய்வுமேற்கொண்டனர். இந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த விபத்துக்கு சதி திட்டம் காரணமாக இருக்கிறதா? என்பது குறித்தும் தண்டவாளங்களில் ரயில் கவிழ்ப்பதற்கான சதி நடத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News