2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மினி ஏலம், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்த வீரர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,
1. கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரகானே ரூபாய் 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
2. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
3. ஷேக் ரஷீத் என்பவர், ரூபாய் 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
4. நிஷாந்த் சிந்து – ஹரியானா மாநிலம் – ரூபாய் 60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
5. கைல் ஜேமிசன் – நியூசிலாந்து வீரர் – ரூபாய் 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
6. அஜய் மண்டல் – சத்தீஸ்கர் மாநிலம் – ரூபாய் 20 லட்சம்
7. பகத் வர்மா – ஆந்திர மாநிலம் – ரூபாய் 20 லட்சம்
மேற்கண்ட 7 கிரிக்கெட் வீரர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள் ஆவர். தற்போது, எந்தெந்த வீரர்கள், சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர் என்று பார்க்கலாம்.
எம்.எஸ்.டோனி, டேவான் கான்வே, ருதுராஜ், ராயுடு, சேனாபதி, மொயின் அலி , ஷிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சான்ட்னர், ஜடேஜா, துஷார், முகேஷ், பத்திரனா, சிமர்ஜீத், தீபக் சாஹர், சோலங்கி, தீக்ஷனா, ஸ்டோக்ஸ், ரஹானே, ரஷீத், நிஷாந்த் சிந்து, ஜமீசன், அஜய் மான்டால் , பகத் வர்மா