விடாமுயற்சி ரிலீஸ் எப்போது? அனிருத் அளித்த அப்டேட்!

அஜித், த்ரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில், இன்றும் முடியாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால், இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று, ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், விடாமுயற்சி எப்போது ரிலீஸ் ஆகும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரும் என்று நினைக்கிறேன் என அவர் பதில் அளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News