தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சிவா. இவரது தம்பியான பாலா, தமிழில், அன்பு, காதல் கிசுகிசு, வீரம், அண்ணாத்தே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் மீது, அவரது முன்னாள் மனைவி அம்ருதா சுரேஷ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், என்னையும், எனது மகளையும், நடிகர் பாலா துன்புறுத்தி வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று நடிகர் பாலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.