சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்.15) இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல சாலைகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.