பூர்விகா ஷோரூம் உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

செல்போன்கள், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் மிகவும் பிரபலமான ஷோரூம்களில் ஒன்றாக இருப்பது பூர்விகா.

யுவராஜ் என்பவர் தான், இந்த ஷோரூம்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் அருகே யுனைடெட் காலனி பகுதியில் உள்ள யுவராஜின் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 7.30 மணி முதல் தற்போது வரை நடந்து வரும் இந்த சோதனையில், 5 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News