யார் காலிலும் விழக்கூடாது: தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அட்வைஸ்!

தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.18) நடைபெற்றது.

இதில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது: அடுத்த வாரம், தவெக-வின் வெற்றி மாநாட்டில், தலைவர் விஜய் உங்களைச் சந்திக்கவிருக்கிறார். இன்று தவெகவின் அரசியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, சிறப்பு அழைப்பாளர்கள் பலர் வந்துள்ளனர். தலைவரின் உத்தரவுக்கிணங்க, நாம் அனைவரும் இங்கு குழுமி இருக்கிறோம்.

ஆரம்பத்தில், நாம் ரசிகர் மன்றங்களாக இருந்தோம். பின்னர் நற்பணி மன்றாக இருந்தோம். அதன்பிறகு, மக்கள் இயக்கமாக மாறினோம். இன்று தமிழக வெற்றிக் கழகமாக, அரசியலுக்கு வந்திருக்கிறோம். தலைவர் விஜய்யின் கடினமான உழைப்பால், தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும், தவெக-வின் கொடி பறந்துகொண்டிருக்கிறது.

பல நாட்களாக நான் சொல்ல வேண்டும் என்று விரும்பியதை, இந்த பயிலரங்கத்தின் வாயிலாக நான் கூற ஆசைப்படுகிறேன். இதைத்தான் இனிவரும் காலங்களில் நாம் பின்தொடர வேண்டும்.முதலில், நீங்கள் அனைவரும் தாய் – தந்தை கால்களில்தான் விழ வேண்டும். வேறு யாருடைய கால்களிலும், இனிவரும் காலங்களில் நீங்கள் விழக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, விழுப்புரம் மாநாட்டு ஏற்பாடு நிகழ்வுகளை ஆய்வு செய்த ஆனந்தை காணவந்த கட்சியினர் அவரது காலில் விழும் காட்சிகள் குறித்து செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலில் விழ வேண்டாம் என்று கட்சியினரும் வலியுறுத்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Recent News