இந்தியன் 3 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது.

இந்தியன்- 2 படப்பிடிப்பு நடந்தபோது மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அதனால் இந்தியன்- 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மூன்றாம் பாகத்திற்கான பிரமோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தியன்- 2 படம் தோல்வியடைந்து விட்டதால் இந்தியன்-3 படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதோடு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து முடித்திருக்கும் தக் லைப் படத்தை முதலில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு இந்தியன் 3 படத்தை வெளியிட எண்ணி உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News