ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம்?

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன்.

சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பெங்களூரில் உள்ள யோகா மையத்திற்கு, யோகா கற்றுக் கொள்வதற்காக ரம்யா பாண்டியன் சென்றுள்ளார். அப்போது, அவருக்கும், அந்த யோகா மையத்தின் உரிமையாளர் லவல் தவானுக்கும் இடையே, காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இருவீட்டார் சம்மதத்துடன் உத்தரகாண்டில், அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News