31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் திருமணம் நடத்தி வைத்தார்!

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. இதில் மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடையுள்ள தங்கத்தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று காலை (அக்.21) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நம்ம ஆட்சி பொறுப்புக்கு வந்து அறநிலையதுறை நிகழ்ச்சிகளில் தான் நான் அதிகம் கலந்து கொண்டு உள்ளேன். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் கணக்கு எடுத்து பார்த்தேன். எல்லா கணக்கிலும் முந்தி இருப்பது அறநிலைய துறை நிகழ்ச்சிகள் தான். எல்லா துறைக்கும் சரிசமமான முக்கியத்துவம் அளித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ள 2,226 கோயில் திருப்பணிகள் முடிக்க பட்டு குடமுழு நடைபெற்று உள்ளது. 6,792 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கபட்டுள்ளது.

5,00 மூத்த குடிமக்கள் ராமேஸ்வரம் காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆட்சியில் தங்க முதலீடு திட்டம் செயல்படுத்தபடாமல் இருந்தது நீதிமன்ற தீர்ப்புகளை பெற்று தற்போது தங்கம் முதலீடு செய்யும் திட்டம் செயல்படுத்தபட்டு 442 கிலோ சுத்த தங்கம் முதலீடு செய்யபட்டு 5 கோடியே 72 லட்சம் வட்டி ஆண்டிற்கு கிடைத்து வருகிறது.

கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1,014 பேர் புரட்டாசி மாதம் வைணவ கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறையில் பல சாதனைகளை செய்து வருகிறோம். தமிழில் குடமுழுக்கு நடத்த தீர்ப்பு பெற்று உள்ளோம், பல சாதகமான தீர்ப்புகள் வந்துள்ளது. பாம்பன் சுவாமி கோவில் வழக்கு முடித்து வைப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

ஊர் கோயில் வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரபட்டு உள்ளது. சரியான நபரிடம் தான் இந்த துறையை ஒப்படைத்து உள்ளோம்.

உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள், நாம் சாதனைகளை தடுக்க பல வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதை முறி அடித்து நாம் சாதனைகளை தொடர்ந்து கொண்டு உள்ளோம். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக நம்முடைய அரசு விளங்கி கொண்டு இருக்கிறது. என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News