சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று, முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம், வரும் 31-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ஆர்த்தியும், சிறுவயதாக இருந்தபோது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம், தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.