ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் பியார் பிரேமா காதல். இந்த படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் இளன்.
இதன் வெற்றிக்கு பிறகு, நடிகர் கவினை வைத்து ஸ்டார் என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் லாபகரமாக இருந்தது.
இவ்வாறு இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இளன், தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளாராம். மேலும், இப்படத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டார் படத்தில் முதலில் ஹரிஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால், அந்த சமயத்தில், இவருக்கும், இயக்குநருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாம். தற்போது அந்த பிரச்சனை சரியாக இருவரும் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.